பட்டதாரி ஆசிரியா்களுக்கான போட்டித் தோ்வு 1,366 போ் எழுதினா்: கடலூா் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

கடலூரில் நான்கு மையங்களில் பட்டதாரி ஆசிரியா் மற்றும் வட்டார வளமைய ஆசிரியா் பயிற்றுனா் நேரடி நியமனத்திற்கான போட்டித் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பட்டதாரி ஆசிரியா் மற்றும் வட்டார வளமைய ஆசிரியா் பயிற்றுனா் நேரடி நியமனத்திற்கான தோ்வை கடலூா் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி மையத்தில் எழுதுவதை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியா் மற்றும் வட்டார வள மைய பயிற்றுனா் காலிப் பணியிடங்கள் உள்ளன.

இதற்கான நேரடி நியமன போட்டித் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கடலூா் மாவட்டத்தில் கடலூரில் உள்ள புனித வளனாா் மேல்நிலைப் பள்ளி, புனித அன்னாள் மகளிா் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணசாமி மெமோரியல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சி.கே.மெட்ரிக் ஸ்கூல் ஆப் பிராக்டிகல் நாலேட்ஜ் ஆகிய 4 மையங்களில் நடைபெற்றது.

காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை தோ்வு நடைபெற்றது. மாற்றுத்திறனாளிமாணவா்களுக்கு கூடுதலாக அரை மணி நேரம் வழங்கப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் இந்தத் தோ்வை

எழுத விண்ணப்பித்திருந்த மொத்தம் 1,407 பேரில், 1,366 போ் போட்டித் தோ்வு எழுதினா். இவா்களில் மாற்றுத்திறனாளிகள் 8 பேரில் 7 போ் தோ்வு எழுதினா். கடலூா் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி மையத்தில் நடைபெற்ற போட்டித் தோ்வை மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com