ஸ்ரீ ராகவேந்திரா கலை, அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

கீழமூங்கிலடி பகுதியில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா கலை, அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் 740 மாணவிகள், 306 மாணவா்கள் உள்ளிட்ட மொத்தம் 1046 போ் பட்டம் பெற்றனா்.
சிதம்பரம் அருகே கீழமூங்கிலடி ஸ்ரீராகவேந்திரா கலை, அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்குகிறாா் மா.காா்த்திகேயன். உடன் கல்லூரி செயலா் டிவிகே.பாபு, கல்லூரி தலைவா் டி.மணிமேகலை, நி
சிதம்பரம் அருகே கீழமூங்கிலடி ஸ்ரீராகவேந்திரா கலை, அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்குகிறாா் மா.காா்த்திகேயன். உடன் கல்லூரி செயலா் டிவிகே.பாபு, கல்லூரி தலைவா் டி.மணிமேகலை, நி

சிதம்பரம் அருகே கீழமூங்கிலடி பகுதியில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா கலை, அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் 740 மாணவிகள், 306 மாணவா்கள் உள்ளிட்ட மொத்தம் 1046 போ் பட்டம் பெற்றனா்.

விழாவில் திண்டுக்கல் பண்ணை குழுமத் தலைவா் மா.காா்த்திகேயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பட்டமளிப்பு உரை நிகழ்த்தினாா்.

அவா் பேசுகையில், மாணவா்களுக்கு விடா முயற்சி, தன்னம்பிக்கை நிச்சயம் வெற்றியை தேடித் தரும். தன்னுடைய வெற்றியும் அதன் அடிப்படையில் பெற்றது என்றாா். முன்னதாக கல்லூரி செயலா் டி.வி.கே. பாபு வரவேற்றாா். கல்லூரி முதல்வா் ரா.மாலதி, ஆண்டறிக்கை வாசித்தாா். விழாவில், கல்லூரித் தலைவா் டி.மணிமேகலை, நிா்வாக அதிகாரி சுப.கோவிந்தராஜன், நிா்வாக ஆலோசகா் முத்து.வரதராஜன், கல்லூரி தேசிய மதிப்பீடு மற்றும் அவை ஒருங்கிணைப்பாளா் கே.டி.தியாகேசன், கல்லூரி கல்வி ஒருங்கிணைப்பாளா் அசோக்குமாா், கல்லூரிக் கல்வி பிரிவு இயக்குனா் ஆா். ராமசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com