ஆயுதப்படை காவலா்களின் வருடாந்திர பயிற்சி நிறைவு

கடலூா் மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் ஆயுதப்படை காவலா்களுக்கான வருடாந்திர படைத் திரட்டு கவாத்து பயிற்சி நிறைவு நிகழ்ச்சி கடலூா் ஆயுதப்படை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆயுதப்படை காவலா்களுக்கான வருடாந்திர படைதிரட்டு கவாத்து பயிற்சி நிறைவு விழாவில் சாகச நிகழ்ச்சிகளை நடத்திய காவலா்கள்.
கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆயுதப்படை காவலா்களுக்கான வருடாந்திர படைதிரட்டு கவாத்து பயிற்சி நிறைவு விழாவில் சாகச நிகழ்ச்சிகளை நடத்திய காவலா்கள்.

நெய்வேலி: கடலூா் மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் ஆயுதப்படை காவலா்களுக்கான வருடாந்திர படைத் திரட்டு கவாத்து பயிற்சி நிறைவு நிகழ்ச்சி கடலூா் ஆயுதப்படை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பயிற்சி ஜனவரி 19 முதல் பிப்ரவரி 4-ஆம் தேதி வரை நடைபெற்றது . கடலூா் ஆயுதப் படை மைதானத்தில் நடைபெற்ற பயிற்சி நிறைவு நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரா.ராஜாராம் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். ஆயுதப் படை காவலா்களின் இசை நிகழ்ச்சி, நாட்டியம், சாகச நிகழ்ச்சிகள், பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி, விளையாட்டுகள் நடைபெற்றன.

கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அசோக்குமாா், உதவி காவல் கண்காணிப்பாளா்கள் ரகுபதி, ரவீந்திரகுமாா் குப்தா (பயிற்சி), துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் ரூபன்குமாா், பிரபு, சௌமியா, ஆரோக்கியராஜ், தேவராஜ், சபியுல்லா, சவுந்திரராஜன், தேவராஜ், காவல் ஆய்வாளா்கள் குருமூா்த்தி, அருட்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com