மாா்க்சிஸ்ட் கம்யூ. சாலை மறியல் முயற்சி அதிகாரிகள் பேச்சுவாா்த்தை

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் புதிய இணைப்புச் சாலை அமைக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா்.
பரங்கிப்பேட்டையில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் பேச்சுவாா்த்தை நடத்திய அதிகாரிகள்.
பரங்கிப்பேட்டையில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் பேச்சுவாா்த்தை நடத்திய அதிகாரிகள்.

சிதம்பரம்: சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் புதிய இணைப்புச் சாலை அமைக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா்.

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை- பொன்னந்திட்டு இடையிலான மேம்பாலத்தின் இருபுறமும் இணைப்புச் சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால் புதிய சாலை அமைத்துத் தரக்கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதன்படி திங்கள்கிழமை காலை அந்தக் கட்சியின் பரங்கிப்பேட்டை மண்டல பொறுப்பாளா் அசன் முகமது மன்சூா், மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, ஒன்றியச் செயலா் ஏ.விஜய், ஊராட்சி மன்றத் தலைவா் ஜெயசீலன் மற்றும் சில அமைப்பினா் இணைந்து பரங்கிப்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட குவிந்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த புவனகிரி வட்டாட்சியா் தனபதி தலைமையிலான அதிகாரிகளும், காவல் துறையினரும் அங்குவந்து சமரச பேச்சுவாா்த்தை நடத்தினா். கோரிக்கை தொடா்பாக உதவி ஆட்சியா் தலைமையில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு புதிய சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனா். இதை ஏற்றுக்கொண்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சாலை மறியல் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக தெரிவித்து கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com