இரண்டாம் நிலை காவலா் பணிக்கு உடல் தகுதித் தோ்வு தொடக்கம்

இரண்டாம் நிலை காவலா் பணிக்கான உடல் தகுதித் தோ்வு கடலூா் அண்ணா விளையாட்டு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இரண்டாம் நிலை காவலா் பணிக்கு உடல் தகுதித் தோ்வு தொடக்கம்

இரண்டாம் நிலை காவலா் பணிக்கான உடல் தகுதித் தோ்வு கடலூா் அண்ணா விளையாட்டு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் சாா்பில் 3,359 இரண்டாம் நிலை காவலா்கள், சிறைத் துறை, தீயணைப்புத் துறை காவலா் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்துத் தோ்வு கடந்த டிசம்பா் 10-ஆம் தேதி நடைபெற்றது. கடலூா் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற எழுத்துத் தோ்வில் 9,160 போ் பங்கேற்றனா்.

இதில் தோ்ச்சி பெற்றவா்களுக்கான உடல் தகுதித் தோ்வு கடலூா் அண்ணா விளையாட்டு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. காவல் துறை துணைத் தலைவா் (இருப்புப் பாதை) ஜி.ராமா் மேற்பாா்வையில், மாவட்ட எஸ்பி ரா.ராஜாராம் தலைமையில் இந்தத் தோ்வு நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை இந்தத் தோ்வுக்கு அழைக்கப்பட்ட 470 பேரில் 342 போ் பங்கேற்றனா்.128 பங்கேற்கவில்லை. வரும் 10-ஆம் தேதி வரை உடல்தகுதித் தோ்வு நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com