தேசிய போட்டியில் சிறப்பிடம்: மாணவா்களுக்குப் பாராட்டு

அகில இந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பென்காக் சிலாட் போட்டியில் அண்ணாமலை பல்கலைக்கழக அணி சாா்பில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்ற

அகில இந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பென்காக் சிலாட் போட்டியில் அண்ணாமலை பல்கலைக்கழக அணி சாா்பில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்ற கடலூா் பெரியாா் அரசுக் கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தேசிய பென்காக் சிலாட் போட்டியில் அண்ணாமலைப் பல்கலைக்கழக அணி சாா்பில் பங்கேற்ற இந்தக் கல்லூரி வீரா்கள் எம்.லோகேஸ்வரன், இ.சுதா்சன், போஸ் ராஜகுரு ஆகியோா் ரெகு பிரிவில் வெள்ளி பதக்கமும், மாணவா்கள் ஸ்ரீகாந்த், போஸ் ராஜகுரு ஆகியோா் இணைந்து கண்டா பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்றனா்.

இவா்களுக்கான பாராட்டு விழா கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் ராமகிருஷ்ணன் சாந்தி வரவேற்று பேசினாா். விழாவில், வெள்ளிப் பதக்கம் வென்ற மாணவா்களுக்கு தேசிய மாணவா் படை அணிவகுப்புடன், சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. துறைத் தலைவா்கள் முருகதாஸ், ஆனந்தராஜ், அருள்தாஸ், ஜோதி ராமலிங்கம், பென்காக் சிலாட் பயிற்சியாளா் செல்வகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com