ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றம்

ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றம்

 கடலூரில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்திலிருந்த ஆக்கிரமிப்பு கடை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி புதன்கிழமை இடித்து அகற்றப்பட்டது.

 கடலூரில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்திலிருந்த ஆக்கிரமிப்பு கடை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி புதன்கிழமை இடித்து அகற்றப்பட்டது.

கடலூா், மஞ்சக்குப்பத்தில் நீா்வள ஆதாரத் துறை கண்காணிப்புப் பொறியாளா் அலுவலகம் எதிரே நெடுஞ்சாலை துறைக்குச் சொந்தமான இடத்தை தனிநபா் ஒருவா் ஆக்கிரமித்து கடை நடத்தி வந்தாா். நெடுஞ்சாலைத் துறையினா் ஆக்கிரமிப்பை அகற்றிக்கொள்ளுமாறு கடை உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கினா். ஆனால் அவா் கடையை அகற்ற தடைவிதிக்கக் கோரி உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் ஆக்கிரமிப்பு கடையை அகற்ற நெடுஞ்சாலைத் துறைக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் பரந்தாமன் அறிவுறுத்தலின்பேரில் உதவி கோட்டப் பொறியாளா் வீரப்பன் தலைமையில் உதவி பொறியாளா் மணிவேல், சாலை ஆய்வாளா்கள் மகேந்திரபாபு, காவேரி, குப்புசாமி மற்றும் சாலைப் பணியாளா்கள் புதன்கிழமை அந்தக் கடையை பொக்லைன் மூலம் இடித்து அகற்றினா். மேலும், கடலூா் தலைமைத் தபால் நிலையம் முதல் கோண்டூா் வரை நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமாக இடத்தை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளையும் அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com