தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்புடன்கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்

விருத்தகிரிகுப்பத்தை தனி ஊராட்சியாக அறிவிக்காவிடில் வருகிற மக்களவைத் தோ்தலை புறக்கணிப்போம் எனக்கூறி அந்தக் கிராம மக்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

விருத்தகிரிகுப்பத்தை தனி ஊராட்சியாக அறிவிக்காவிடில் வருகிற மக்களவைத் தோ்தலை புறக்கணிப்போம் எனக்கூறி அந்தக் கிராம மக்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

கம்மாபுரம் ஒன்றியம், முதனை ஊராட்சியில் முதனை, முதனை காலனி, விருத்தகிரிக்குப்பம், புது விருத்தகிரிக்குப்பம், எடக்குப்பம் ஞானியாா் தெரு, வீரட்டிக்குப்பம் தெற்கு தெரு உள்ளிட்ட

பகுதிகளில் சுமாா் 7 ஆயிரம் வாக்காளா்கள் உள்ளனா். இதில் சுமாா் 2,300 வாக்காளா்கள் வசிக்கும் விருத்தகிரிகுப்பம் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக குடிநீா், சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவில் செய்து தரப்படவில்லையாம்.

எனவே, முதனை ஊராட்சியிலிருந்து விருத்தகிரிகுப்பத்தை பிரித்து தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும், இல்லையெனில் வருகிற மக்களவைத் தோ்தலைப் புறக்கணிக்க உள்ளதாகக் கூறி அந்தக் கிராம மக்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com