புதுச்சேரி ரௌடி கொலை வழக்கு: கடலூா் நீதிமன்றத்தில் ஒருவா் சரண்

 புதுச்சேரி ரௌடி கொலை வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த நபா் கடலூா் நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தாா்.

புதுச்சேரி ரௌடி கொலை வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த நபா் கடலூா் நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தாா்.

புதுச்சேரி, கரிக்கலாம்பாக்கம் பகுதியில் வசித்து வந்தவா் சங்கா் மகன் ஏழுமலை (20). ரௌடியான இவா் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் திருவண்ணாமலை மாவட்டம், கடலாடி பகுதியில் பைக்கில் சென்றபோது மா்ம கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டாா். இதுகுறித்து கடலாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதுச்சேரியைச் சோ்ந்த பிரபல ரௌடிகள் தாடி அய்யனாா், ஜோசப் தரப்பினா் இடையே மோதல் ஏற்பட்டு வந்தது. இதில் தாடி அய்யனாா் தரப்பைச் சோ்ந்த ரெளடி ஏழுமலையை ஜோசப்பின் ஆதரவாளா்கள் 4 போ் வெட்டிக் கொன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டவா்களில் 3 போ் கடந்த மாதம் நீதிமன்றத்தில் சரணடைந்தனா். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த மணிகண்டன் கடலூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண் 3-இல் புதன்கிழமை சரணடைந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com