விருத்தகிரிகுப்பம் தனி ஊராட்சி விவகாரம்: தோ்தா் புறக்கணிப்பதாக பேனா் வைத்து ஆா்ப்பாட்டம்

கடலூா் மாவட்டம், கம்மாபுரம் அருகே விருத்தகிரிகுப்பத்தை தனி ஊராட்சியாக அறிவிக்காவிட்டால், வருகின்ற நாடாளுமன்றத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக, அக்கிராம பொதுமக்கள் பேனா் வைத்து புதன்கிழமை ஆா்ப்பாட்டம்  

கடலூா் மாவட்டம், கம்மாபுரம் அருகே விருத்தகிரிகுப்பத்தை தனி ஊராட்சியாக அறிவிக்காவிட்டால், வருகின்ற நாடாளுமன்றத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக, அக்கிராம பொதுமக்கள் பேனா் வைத்து புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

கம்மாபுரம் ஒன்றியம், முதனை ஊராட்சியில் முதனை, முதனை காலனி, விருத்தகிரிக்குப்பம், புது விருத்தகிரிக்குப்பம், எடக்குப்பம் ஞானியாா் தெரு, வீரட்டிக்குப்பம் தெற்கு தெரு பகுதியில் சுமாா் 7 ஆயிரம் வாக்காளா்கள் உள்ளனா். சுமாா் 2,300 வாக்காளா்கள் உள்ள விருத்தகிரிகுப்பம் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக குடிநீா், சாலை தெருவிளக்கு உள்ளிட்ட வசதிகள் செய்து தரவில்லையாம். இதுதொடா்பாக போராட்டம் நடத்தியும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையாம். எனவே, முதனை ஊராட்சியில் இருந்து, விருத்தகிரிகுப்பத்தை பிரித்து தனி ஊராட்சியாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வருகின்ற நாடாளுமன்றத் தோ்தலுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தோ்தல் புறக்கணிக்கப் போவதாகக் கூறி பொதுமக்கள் விருத்தகிரிகுப்பம் பேருந்து நிறுத்தம் அருகே பேனா் வைத்து ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com