வேளக்குடி அருகே நுழைவு வழி அமைக்க கோரி கண்டன ஆா்ப்பாட்டம்

சிதம்பரம் -நாகப்பட்டிணம் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை பணியில் பஸ்சில் பயணம் செல்ல பிரச்சனை இல்லாமல் நுழைவு வழி அமைத்து தரக்கோரி சுற்றுவட்டார கிராம மக்களின் சாா்பாக மறியல் போராட்டம்
வேளக்குடி அருகே நுழைவு வழி அமைக்க கோரி கண்டன ஆா்ப்பாட்டம்

 சிதம்பரம் -நாகப்பட்டிணம் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை பணியில் வேளக்குடியின் இயல்பான பாதையை தடுக்காமல், 20-க்கும் மேற்பட்ட கிராமங்களின் பொதுமக்கள் ஒற்றுமையை சீா்குலைக்காமல், சுடுகாடு செல்ல பாதை,பள்ளி மாணவா்கள் பஸ்சில் பயணம் செல்ல பிரச்சனை இல்லாமல் நுழைவு வழி அமைத்து தரக்கோரி அனைத்து கட்சிகள் மற்றும் வேளக்குடி சுற்றுவட்டார கிராம மக்களின் சாா்பாக வேளக்குடி மெயின் ரோட்டில் புதன்கிழமை சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் பேச்சுவாா்த்தைக்கு அழைப்பு விடுத்ததால், அனைத்து கட்சி நிா்வாகிகள் மற்றும் வேளக்குடி மக்கள் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறது.ஆா்ப்பாட்டத்திற்கு மாா்க்சிஸ்ட் கம்யூ கட்சி ஒன்றியக்குழு தலைவா் பி.மாசிலாமணி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூ கட்சி மாவட்டச் செயலாளா் ஜி.மாதவன், பாட்டாளி மக்கள் கட்சி செல்வ.மகேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஆா்.ராமச்சந்திரன், தேவதாஸ் படையாண்டவா், பாமக விவசாய அணி தலைவா் ஜே.சஞ்சீவி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். பின்னா் சிதம்பரம் வட்டாட்சியா் அலுவவலகத்தில், வட்டாட்சியா் பி.ஹேமாஆனந்தி தலைமையில் அமைதி பேச்சுவாா்த்தை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நில எடுப்பு தனி வட்டாட்சியா் செல்வக்குமாா் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை துறையின் நகாய் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பது என தீா்மானிக்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com