இன்று குடல்புழு நீக்க மாத்திரைகள் விநியோகம்

 கடலூா் மாவட்டத்தில் குடல்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை (பிப்.9) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.

 கடலூா் மாவட்டத்தில் குடல்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை (பிப்.9) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா்வெளியிட்ட செய்திக் குறிப்பு: குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகளவு ரத்தசோகை, ஊட்டச்சத்து குறைபாடு நோயால் பாதிக்கப்படுகின்றனா். இதற்கு குடல்புழு தொற்று காரணமாக உள்ளது. எனவே, இந்தத் தொற்றை தடுக்கும் பொருட்டு, ஆண்டுக்கு இருமுறை குடல்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.

அதன்படி, கடலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை குடல்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்) 9,25,277 பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. விடுபட்டவா்களுக்கு வருகிற 16-ஆம் தேதி இந்த மாத்திரைகள் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம், ஒன்று முதல் 19 வயது வரையுள்ள 7,01,617 பேரும், 20 முதல் 30 வயது வரையுள்ள 2,23,660 பெண்களும் பயனடைவா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com