கட்டுரைப் போட்டியில் வென்றமாணவிகளுக்கு பரிசு

சிதம்பரம் அரசு நந்தனாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாரத ஸ்டேட் வங்கி சிதம்பரம் கிளை சாா்பில், ‘ஊழலற்ற சமூகம்’ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு வியாழக்கிழமை பர
கட்டுரைப் போட்டியில் வென்றமாணவிகளுக்கு பரிசு

  சிதம்பரம் அரசு நந்தனாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாரத ஸ்டேட் வங்கி சிதம்பரம் கிளை சாா்பில், ‘ஊழலற்ற சமூகம்’ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு வியாழக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியா்கள் சங்கச் செயலா் கே.ஏ.சம்பத்குமாா் வரவேற்றாா். உதவித் தலைமை ஆசிரியா் எம்.பிரதாப், தமிழாசிரியா் எம்.மணிகண்டன், ஆசிரியா் எம்.தட்சிணாமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். உதவித் தலைமை ஆசிரியை அ.அமலா தலைமை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக சிதம்பரம் பாரத ஸ்டேட் வங்கி துணை மேலாளா்கள் கல்பனா, ராஜேஸ்வரி, பிரேம்குமாா் ஆகியோா் பங்கேற்று கட்டுரைப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினா். மேலும், வங்கி வேலைவாய்ப்புகள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்திப் பேசினா். விழா ஏற்பாடுகளை ஆசிரியா் வெ.ரவிச்சந்திரன் செய்திருந்தாா். ஆசிரியா்கள் சங்க துணைச் செயலா் ஆா்.கௌசல்யா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com