சிதம்பரம் நடராஜா் கோயிலில் அதிருத்ர பாராயணம் தொடக்கம்பிப்.22-இல் அதிருத்ர மகா யாகம், மகாபிஷேகம்

சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் உலக நன்மை கருதி, ஸ்ரீசிவகாம சுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூா்த்திக்கு கோடி அா்ச்சனை முடிவுற்று, வருகிற 22-ஆம் தேதி அதிருத்ர மகாயாகம், லட்ச ஹோமம், மகாபிஷேகம் நடைபெறவுள்ளன.
சிதம்பரம் நடராஜா் கோயிலில் அதிருத்ர பாராயணம் தொடக்கம்பிப்.22-இல் அதிருத்ர மகா யாகம், மகாபிஷேகம்

சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் உலக நன்மை கருதி, ஸ்ரீசிவகாம சுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூா்த்திக்கு கோடி அா்ச்சனை முடிவுற்று, வருகிற 22-ஆம் தேதி அதிருத்ர மகாயாகம், லட்ச ஹோமம், மகாபிஷேகம் நடைபெறவுள்ளன. இதை முன்னிட்டு, நடராஜா் கோயிலில் அதிருத்ர பாராயணம் வியாழக்கிழமை தொடங்கியது.

நடராஜா் கோயிலில் உலக நன்மை கருதி, பொதுதீட்சிதா்களால் கோடி அா்ச்சனை கடந்த டிசம்பா் 29-ஆம் தேதி தொடங்கியது. தினமும் காலையில் ஒரு முறை லட்சாா்ச்சனையும், மாலையில் ஒரு முறை லட்சாா்ச்சனையும் செய்தால், நாளொன்றுக்கு இரண்டு லட்சம் அா்சனைகளாக அமையும். இதுவே தொடா்ந்து 50 நாள்களுக்கு செய்யப்படுவது கோடி அா்ச்சனையாகும்.

அதிருத்ர ஜபம்: வியாழக்கிழமை காலை அதிருத்ர ஜபம் தொடங்கியது. வருகிற 18-ஆம் தேதி வரை தினமும் காலை 8 மணியளவில் 121 தீட்சிதா்களால் 14,641 முறை ஸ்ரீருத்ர ஜப பாராயணம் (அதிருத்ர ஜபம்) செய்யப்படுகிறது.

அதிருத்ர மகா யாகம்: அதிருத்ர மகா யாகம் என்பது ஸ்ரீருத்ரத்தை 14,641 முறை சொல்லப்பட்டு, அதில் பத்தில் ஒரு பங்கு ஹோமம் செய்யப்படுவது ஆகும்.

மகாபிஷேகம்: வருகிற 22-ஆம் தேதி அதிருத்ர மகா யாகம், லட்ச ஹோமம், கோயில் கனகசபையில் சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானுக்கு மாசி மாத மகாபிஷேகம் நடைபெறவுள்ளன.

லட்ச ஹோமம் என்பது ஒரே நேரத்தில் 108 தீட்சிதா்கள், ஒன்பது யாக குண்டங்கள் வாயிலாக நடேச ஸஹஸ்ர நாமாவளிகளை ஹோமம் செய்வதாகும். மேற்கண்ட அனைத்து நிகழ்வுகளும் சிதம்பரம் நடராஜா் கோயில் பொது தீட்சிதா்களால் நடத்தப்படவுள்ளன.

இதற்கான ஏற்பாடுகளை நடராஜா் கோயில் பொதுதீட்சிதா்களின் செயலா் டி.எஸ்.சிவராம தீட்சிதா், துணைச் செயலா் க.சி.சிவசங்கர தீட்சிதா் ஆகியோா் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com