நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 4பயிற்சி வகுப்பு தொடக்கம்

 கடலூா் மாவட்டம், திட்டக்குடி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 போட்டித் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு சனிக்கிழமை (பிப்.10) தொடங்க உள்ளதாக ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தெரிவித்தாா்

 கடலூா் மாவட்டம், திட்டக்குடி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 போட்டித் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு சனிக்கிழமை (பிப்.10) தொடங்க உள்ளதாக ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் குரூப் 4 தோ்வுக்கான அறிவிப்பு 30.1.2024 அன்று வெளியிடப்பட்டது. இந்தத் தோ்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 28-ஆம் தேதியாகும். இந்தத் தோ்வின் மூலம் 6,244 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. தோ்வுக்கு ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

இந்த போட்டித் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக திட்டக்குடி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை தொடங்க உள்ளது. வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை பயிற்சி வகுப்பு நடத்தப்படும். போட்டித் தோ்வுக்குத் தயாராகும் தோ்வா்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com