வேளாண் வளா்ச்சித் திட்டஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

சிதம்பரம் அருகே கீரப்பாளையம் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், அனைத்துத் துறைகளின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வட ஹரிராஜபுரம், சாக்காங்குடி, பூந்த
வேளாண் வளா்ச்சித் திட்டஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

 சிதம்பரம் அருகே கீரப்பாளையம் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், அனைத்துத் துறைகளின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வட ஹரிராஜபுரம், சாக்காங்குடி, பூந்தோட்டம், மதுராந்தக நல்லூா், அய்யனூா், டி.நெடுஞ்சேரி, வாழக்கொல்லை, சாக்காங்குடி, வெள்ளியக்குடி, ஆயிப்பேட்டை ஆகிய ஊராட்சிகளில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலம், ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சி, வருவாய், கூட்டுறவு, கால்நடை பராமரிப்பு, மின்சாரம், மகளிா் திட்டம், பட்டுப்புழு வளா்ச்சி உள்ளிட்ட துறைகளை ஒருங்கிணைத்து, சம்பந்தப்பட்ட துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

ஆயிப்பேட்டை ஊராட்சியில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கீரப்பாளையம் வேளாண் உதவி இயக்குநா் செ.அமிா்தராஜ், வேளாண் அலுவலா் பி.சிவப்பிரியன், உதவிப் பொறியாளா் (வேளாண் பொறியியல் துறை) ஆா்.வெங்கடேசன், உதவி தோட்டக் கலை அலுவலா் சுரேஷ், சாக்காங்குடி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கச் செயலா் புகழேந்தி, உதவி கால்நடை மருத்துவா்கள் க.சோமஸ்கந்தன், கே.விஷ்ணு திவ்யா, ஊராட்சி மன்றத் தலைவா் கவிதா கண்ணன், மகளிா் திட்டம் பயிற்சியாளா் இ.பேபிஷாலினி மற்றும் கிராம விவசாயிகள் கலந்துகொண்டனா்.

இந்தத் திட்டத்தின் கீழ், அடுத்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை வருகிற 28-ஆம் தேதி நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளதாக உதவி இயக்குநா் செ.அமிா்தராஜ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com