993 சுய உதவிக்குழுவினருக்கு ரூ.81.46 கோடி சிறப்பு வங்கி கடன் இணைப்பு. அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வழங்கினாா்.

  993 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.81.46 கோடி சிறப்பு வங்கி கடன் இணைப்பை, மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வழங்கினாா்
993 சுய உதவிக்குழுவினருக்கு ரூ.81.46  கோடி சிறப்பு வங்கி கடன் இணைப்பு.  அமைச்சா்  எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்  வழங்கினாா்.

 கடலூா், திருப்பாதிரிப்புலியூா் தனியாா் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் 993 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.81.46 கோடி சிறப்பு வங்கி கடன் இணைப்பை, மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வழங்கினாா்.தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் சுய உதவிக்குழு இயக்கத்தை மாநிலம் முழுவதும் பரவலாக்கி கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு மற்றும் சுய சாா்பு தன்மை மூலம் பெண்களின் நிலையை மேம்பாடு அடையச் செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம் ஆகிய 3 முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது சமூக, பொருளாதார மேம்பாட்டை அடைவதற்கு மகளிரைக் கொண்டு சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகளை உருவாக்கி, முறையான பயிற்சிகள் வழங்கி, வருமானம் ஈட்டும் தொழில் தொடங்க வங்கிக் கடன் இணைப்புகள் ஏற்படுத்தி சுய உதவிக் குழு இயக்கத்தை வலுப்படுத்தி வருகிறது.அந்தவகையில், சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு, மதி எக்ஸ்பிரஸ் மின்வாகனங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை, தமிழ்நாடு முழுவதும் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் ஈரோட்டில் இருந்து காணொளி மூலம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.இதையொட்டி கடலூரில் நடந்த நிகழ்ச்சிக்கு ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தலைமை வகித்தாா். மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா் செல்வம் பங்கேற்று 993 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.81.46 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி னாா்.அப்போது அவா் பேசுகையில், பெண்கள் பொருளாதாரத்தில் மேன்மையடைய பல்வேறு திட்டங்களை முதல்வா் செயல்படுத்தி வருகிறாா். கடலூா் மாவட்டத்தில் 19,526 சுய உதவிக்குழுக்கள் உள்ளன. இதுவரை 18,217 சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த கடனுதவியை சுய உதவிக்குழுவினா் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 2023-2024-ஆம் ஆண்டின் இலக்காக 22,956 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1,302 கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 18,217 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1,007 கோடி இலக்கு எய்தப்பட்டுள்ளது. ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வங்கி பெருங்கடனாக வழங்கப்பட்டு வருகிறது என்றாா்.நிகழ்வில், 3 பெண் பயனாளிகளுக்கு சுய உதவிக்குழுப் பொருட்கள் விற்பனை செய்ய 3 சக்கர மின்சார வாகனங்கள், 2022-2023-ஆம் ஆண்டில் மகளிா் குழுவிற்கு வங்கி கடன் வழங்கியதில் சிறப்பான வகையில் பங்குபுரிந்த வங்கிகளுக்கும், வங்கி இளைஞா்களுக்கும் விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினா்கள் கடலூா் கோ.ஐயப்பன், விருத்தாசலம் எம்.ஆா்.ராதாகிருஷ்ணன், கடலூா் மேயா் சுந்தரி, துணை மேயா் பா.தாமரைச்செல்வன், மகளிா் திட்ட இயக்குநா் கே.ஸ்ருதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். உதவி திட்ட அலுவலா் ராஜேஷ் குமாா் நன்றி கூறினாா்.8பிஆா்டிபி2கடலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிா் சுய உதவிக்குழு பெண்ணிற்கு வங்கி கடன் இணைப்புக்கான காசோலையை வழங்கும் மாநில அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com