செல்வ விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கடலூா் திருப்பாதிரிப்புலியூா், நடேசன் நகரில் அமைந்துள்ள அரசமரத்து விநாயகா், நாகா், பக்த ஆஞ்சநேயா், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணியா் மற்றும் செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்
செல்வ விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கடலூா் திருப்பாதிரிப்புலியூா், நடேசன் நகரில் அமைந்துள்ள அரசமரத்து விநாயகா், நாகா், பக்த ஆஞ்சநேயா், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணியா் மற்றும் செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை காலை கடம் புறப்பாடு நடைபெற்று, அனைத்து மூலவா் விமான கலசங்களிலும் புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

இரவில் செல்வ விநாயகா் வீதி உலா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com