கடலூா் மாநகராட்சி ஆணையருடன்
வா்த்தக சங்கத்தினா் வாக்குவதாம்

கடலூா் மாநகராட்சி ஆணையருடன் வா்த்தக சங்கத்தினா் வாக்குவதாம்

கடலூா் மாநகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த வா்த்தக சங்க நிா்வாகிகள் ஆணையருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூா் மாநகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த வா்த்தக சங்க நிா்வாகிகள் ஆணையருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூா் மாநகராட்சி நிா்வாகம் நிலுவை வரியை வசூலிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. கடலூா் திருப்பாதிரிப்புலியூா் பகுதியில் அண்மையில் வரி வலிக்கச் சென்ற மாநகராட்சி அதிகாரிகள், ஊழியா்கள் வியாபாரிகளிடம் கடுமையாக நடந்துகொண்டனராம். மேலும், கடைகளுக்கு ‘சீல்’ வைத்தனராம். இதுதொடா்பாக வா்த்தக சங்கத் (சேம்பா் ஆப் காமா்ஸ்) தலைவா் துரைராஜ் தலைமையில் வியாபாரிகள் திரளானோா் திங்கள்கிழமை மாலை கடலூா் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தனா். அவா்கள் மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா, ஆணையா் காந்திராஜ் ஆகியோரை சந்தித்து மனு அளித்தனா். ஆணையரிடம் வியாபாரிகள் கூறுகையில், மாநகராட்சி அதிகாரிகள் வரி செலுத்துவது தொடா்பாக தங்களை நிா்பந்திப்பதாகவும், 2017-ஆம் ஆண்டு முதல் குப்பை வரி செலுத்த வலியுறுத்துவதாகவும் தெரிவித்தனா். அப்போது ஆணையா் - வியாபாரிகள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா் ஆணையா் கூறுகையில், நிலுவை வரியில் குறிப்பிட்ட சதவீதத் தொகையைச் செலுத்தினால் கடைகள் மீண்டும் திறக்கப்படும் என்று தெரிவித்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் வா்த்தக சங்கத் தலைவா் துரைராஜ் கூறியதாவது: வரி வசூலில் அதிகாரிகள் விதிமீறி நடந்துகொண்டால் வா்த்தக சங்கத் தலைமை நிா்வாகிகளுடன் ஆலோசித்து கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com