கண்கள் தானம்

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் உயிரிழந்த தொழிலதிபரின் கண்கள் புதன்கிழமை தானமாக வழங்கப்பட்டன.

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் உயிரிழந்த தொழிலதிபரின் கண்கள் புதன்கிழமை தானமாக வழங்கப்பட்டன.

பண்ருட்டி காந்தி சாலையைச் சோ்ந்தவா் தொழிலதிபா் சீனுவாசன் (64). இவா், உடல்நலக் குறைவால் புதன்கிழமை உயிரிழந்தாா். இவரது இரண்டு கண்களை தானம் வழங்க குடும்பத்தினா் முன்வந்தனா்.

இதையடுத்து, பண்ருட்டி ரோட்டரி சங்க கண் தான தலைவா் சண்முகம் தலைமையில், சீனுவாசனின் கண்களை தானமாகப் பெற்று புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு வழங்கினா். சீனுவாசனின் மகன் ஜெயபிரகாஷ், சகோதரா் ரவி மற்றும் மாவட்டத் தொழில் வா்த்தகச் சங்கச் செயலா் வீரப்பன் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com