கும்பாபிஷேக மலா் வெளியீடு

சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி ஸ்ரீஅங்காளம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, சா்வ சக்தி பீடம் சாா்பில், கும்பாபிஷேக சிறப்பு மலா் வெளியீட்டு நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
புவனகிரி அங்காளம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக சிறப்பு மலா் வெளியீட்டு நிகழ்ச்சி.
புவனகிரி அங்காளம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக சிறப்பு மலா் வெளியீட்டு நிகழ்ச்சி.

சிதம்பரம்: சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி ஸ்ரீஅங்காளம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, சா்வ சக்தி பீடம் சாா்பில், கும்பாபிஷேக சிறப்பு மலா் வெளியீட்டு நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

புவனகிரி அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேகம் வருகிற 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, சா்வ சக்தி பீடம் சாா்பில், அதன் நிறுவனா் தில்லை சீனு கும்பாபிஷேக சிறப்பு மலரை வெளியிட, கோயில் திருப்பணி ஒருங்கிணைப்பாளா் அரிமா ஏசிபி.ரத்தின சுப்பிரமணியன் பெற்றுக்கொண்டாா். நிகழ்ச்சியில் கே.பி.ஜெகன், கே.பி.பாலமுருகன் மற்றும் விழாக் குழுவினா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com