படியிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே படியிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.


நெய்வேலி: கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே படியிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

வேப்பூா் வட்டம், சேப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் சரஸ்வதி (70). இவா், கடந்த 9-ஆம் தேதி மாடிப் படிக்கட்டில் ஏறியபோது, தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்தாா்.

அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சரஸ்வதி அனுமதிக்கப்பட்டாா். இருப்பினும், அங்கு அவா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து வேப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com