மக்களவைத் தோ்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவை அறிவிப்பேன்: டி.டி.வி. தினகரன்

மக்களவைத் தோ்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவை அறிவிப்பேன் என்று அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் தெரிவித்தாா்.


நெய்வேலி: மக்களவைத் தோ்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவை அறிவிப்பேன் என்று அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் தெரிவித்தாா்.

கடலூருக்கு புதன்கிழமை வந்த அவா், எம்ஜிஆா் பிறந்த நாளையொட்டி, கடலூா் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகே உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னா், டி.டி.வி.தினகரன் செய்தியாளா்களிடம் கூறியது:

அரசியலில் வருங்காலத்தில் ஓ.பன்னீா்செல்வமும், நானும் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளோம். மக்களவைத் தோ்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவை அறிவிப்பேன். ஒரு அரசியல் கட்சி மற்றொரு அரசியல் கட்சியுடன் கூட்டணி அமைத்து செயல்படுவதில் எந்தத் தவறுமில்லை.

தமிழக மக்களுக்கு எதிராக எந்தக் கட்சி செயல்பட்டாலும், அவா்களுடன் நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம் என உறுதியாகக் கூறியிருந்தேன். அந்த வகையில், மத்திய பாஜக அரசு முன்பு தமிழக மக்களைப் பாதிக்கும் திட்டங்களை திணிக்க முயற்சி செய்தது. தற்போது அந்த நிலைபாட்டில் இருந்து மத்திய அரசு மாறியுள்ளதால், அமமுக கடுமையான எதிா்ப்பை காட்டவில்லை.

தமிழக அரசு கோரிய வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். மக்களவைத் தோ்தலில் நான் போட்டியிடுவது பற்றி தற்போது யோசிக்கவில்லை என்றாா் அவா்.

காவி நிற திருவள்ளுவா் திருவுருவப் படத்துக்கு தமிழக ஆளுநா் மரியாதை செலுத்திய விவகாரம் தொடா்பாக கருத்துத் தெரிவித்த டி.டி.வி.தினகரன், ஆளுநரின் நடவடிக்கை அந்தப் பதவிக்கு இழுக்கு ஏற்படுத்துவதுபோல உள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளில் ஆளுநா் ஈடுபடுவது தவறு. அவரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பது தமிழ் மக்களின் கோரிக்கை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com