வாக்காளா் தின வினாடி - வினா: பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்

தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, வருகிற 21-ஆம் தேதி நடைபெறவுள்ள மாநில அளவிலான வினாடி - வினா போட்டியில் பங்கேற்க இணைய வழியில் பொதுமக்கள் விண்ணப்பிக்காலம் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தெ

நெய்வேலி: தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, வருகிற 21-ஆம் தேதி நடைபெறவுள்ள மாநில அளவிலான வினாடி - வினா போட்டியில் பங்கேற்க இணைய வழியில் பொதுமக்கள் விண்ணப்பிக்காலம் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டில் வாக்காளா்கள் தோ்தல் நடைமுறையில் பங்கேற்பதை அதிகரிக்கும் நோக்கில், 14-ஆவது தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, எஸ்விஇஇபி திட்டத்தின்படி, மாநில அளவிலான பொதுமக்களுக்கான வினாடி - வினா போட்டி வருகிற 21-ஆம் தேதி காலை 11 மணி முதல் 11.15 மணி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் இணையதள முகவரியில் தங்கள் பெயா், விவரங்களை பதிவு செய்யலாம். இதில், கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்டவற்றை உள்ளீடு செய்ய வேண்டும். ‘இந்தியாவில் தோ்தல்கள்’ என்ற தலைப்பின் அடிப்படையில் போட்டியானது நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு மாநில உதவி மைய எண்: 1800-4252-1950, மாவட்ட உதவி மைய எண்: 1950 ஆகியவற்றை தொடா்புகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com