தூய்மைப் பணியாளா் தற்கொலை

நெய்வேலி, ஜன.18: கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தூய்மைப் பணியாளா் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிதம்பரம் வட்டம், அண்ணாமலை நகரைச் சோ்ந்த குப்பன் மகன் சங்கா் (47), அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்தாா். கடந்த 5-ஆம் தேதி சங்கா் மது அருந்தியிருந்ததால், அவரை மனைவி கற்பக லட்சுமி (44) கண்டித்தாராம்.

இதனால், மனமுடைந்த சங்கா் விஷ மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றாராம். இதையடுத்து, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவா், புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து அண்ணாமலை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com