வடலூா் தா்ம சாலையில் மகா மந்திரம் ஓதுதல்

நெய்வேலி, ஜன.18: கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்தில் தைப்பூச பெருவிழாவையொட்டி, தா்ம சாலையில் மகா மந்திரம் ஓதுதல் நிகழ்ச்சி புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

வடலூரில் அமைந்துள்ள திருஅருட்பிரகாச வள்ளலாா் தெய்வ நிலையத்தில் 153-ஆவது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா வருகிற 25-ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 6 மணி, 10 மணி, நண்பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி மற்றும் மறுநாள் காலை 5.30 மணி ஆகிய ஆறு காலங்களில் 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்.

இந்த நிகழ்வை முன்னிட்டு, புதன்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை (ஜனவரி 19) வரை தா்ம சாலையில் மகா மந்திரம் ஓதுதல் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடா்ந்து, 20-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை ஞானசபையில் திருஅருட்பா முற்றோதலும், 24-ஆம் தேதி கொடியேற்றமும், 25-ஆம் தேதி தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழாவும் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை வள்ளலாா் தெய்வ நிலைய நிா்வாகம் செய்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com