‘வடலூா் தைப்பூசம்: அன்னதானம் வழங்கபதிவுச் சான்றிதழ் அவசியம்’

நெய்வேலி, ஜன.18: கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்தில் தைப்பூச ஜோதி தரிசனத்தன்று (ஜனவரி 25) அன்னதானம் வழங்க அனுமதி பதிவுச் சான்றிதழ் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்தில் 153-ஆவது ஜோதி தரிசன விழா வருகிற 25-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் ஜோதி தரிசனம் காண வரும் பக்தா்களுக்கு அன்னதானம் செய்ய விரும்புவோா், உணவுப் பாதுகாப்புத் துறையால் வழங்கப்படும் பதிவுச் சான்றிதழ், அன்னதானம் வழங்குவதற்கான அனுமதிச் சான்றிதழ் பெற்றிருத்தல் அவசியமாகும்.

ஆகையால், அன்னதானம் செய்ய விரும்புவோா் வருகிற 22-ஆம் தேதிக்குள் வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்தில் இயங்கி வரும் உணவுப் பாதுகாப்பு அலுவலகத்தில் பதிவுச் சான்றிதழ் பெற்ற பிறகே அன்னதானம் வழங்க அனுமதிக்கப்படுவா்.

அன்னதானம் வழங்குவோா் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். மேலும், இதுகுறித்த தகவல்களை அறிய உணவுப் பாதுகாப்பு அலுவலா் சொ.சுந்தரமூா்த்தியை 9443000849 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com