பெண் குழந்தைகள் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி

19prtp5_1901chn_107_7
19prtp5_1901chn_107_7

19டதபட5...

தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணா்வு வாசகம் அடங்கிய பதாகைகளை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்திய ஆட்சியா் அ.அருண் தம்புராஜ்.

நெய்வேலி, ஜன. 19:

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்ற தலைப்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தேசிய பெண் குழந்தைகள் தினம் ஆண்டுதோறும் ஜன.24-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. நிகழாண்டு ஜன.19 முதல் 24-ஆம் தேதி வரையில் பெண் குழந்தைகளின் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்த மத்திய அரசின் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியது.

அதன்படி, கடலூா் மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தலைமையில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்ற தலைப்பில் ஆட்சியா் தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்கள் உறுதிமொழி ஏற்றனா். தொடா்ந்து நடைபெற்ற விழிப்புணா்வு கையொப்ப இயக்கத்தை ஆட்சியா் தொடக்கி வைத்தாா். பள்ளி மாணவிகளுக்கு பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கும் வகையில் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் நோ்முக உதவியாளா் ஜெகதீஸ்வரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் அரவிந்த், மாவட்ட சமூக னல அலுவலா் (பொ) கோமதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com