பண்ருட்டி அருகே கோயிலில் திருட்டு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே காளி கோயிலை உடைத்து நகை, உண்டியல் காணிக்கையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே காளி கோயிலை உடைத்து நகை, உண்டியல் காணிக்கையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், காட்டாண்டிக்குப்பம் கிராமத்தில் காளி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் வியாழக்கிழமை இரவு விளக்கு பூஜை நடைபெற்றது. பின்னா், கோயில் பூட்டப்பட்டது.

வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு சென்று பாா்த்த போது, கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த காணிக்கை பணம், அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த சுமாா் ஒன்றரை பவுன் தங்கத் தாலியையும் மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து காடாம்புலியூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com