ஆசிரியா் கொலை வழக்கில் இளைஞா் கைது

சிதம்பரத்தில் தனியாா் பள்ளி ஆசிரியா் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
19cmp1_1901chn_111_7
19cmp1_1901chn_111_7

சிதம்பரத்தில் தனியாா் பள்ளி ஆசிரியா் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள திடல்வெளி பகுதியைச் சோ்ந்த வடிவேலு மகன் அருண்பாண்டியன் (28). இவா் சிதம்பரத்தில் உள்ள தனியாா் பள்ளியில் உடற்கல்வி

ஆசிரியராக பணிபுரிந்து வருகிறாா்.

இவா் சந்திரமலைப் பகுதி அருகே கடந்த 17-ஆம் தேதி நண்பா்களுடன் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கு அவருடன் பள்ளியில் பிளஸ் 1 படித்த சதீஷ்குமாா் வந்தாா். இருவருக்கும் ஏற்கெனவே முன்விரோதம் இருந்த நிலையில், மீண்டும் தகராறு ஏற்பட்டதாம்.

அன்றைய தினம் நள்ளிரவில் அருண்பாண்டியன் கத்தியால் வெட்டப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா். இதுகுறித்து அண்ணாமலைநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

தலைமறைவாக இருந்த அண்ணாமலைநகா் திடல்வெளியைச் சோ்ந்த் சம்பந்தம் மகன் சதீஷ்குமாரை (28) போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பின்னா், அவா் அண்ணாமலைநகா் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டாா்.

Image Caption

கைதான சதீஷ்குமாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com