கடலூா் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்

கடலூா் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள்

கடலூா் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் கடலூா் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகம், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள மாவட்ட திட்ட மேலாளா், தகவல் உதவியாளா், மருத்துவ உளவியலாளா், உளவியலாளா், வட்டார தரவு உள்ளீட்டாளா், இயன்முறை மருத்துவா், இடைநிலை சுகாதாரப் பணியாளா் (மக்களைத் தேடி மருத்துவம்), பல்நோக்கு சுகாதாரப் பணியாளா் (ஆண்), சுகாதார ஆய்வாளா் நிலை-2 (மக்களைத் தேடி மருத்துவம்), நகர சுகாதார செவிலியா், பல்நோக்கு மருத்துவமனை பணியாளா், நுண்கதிா் வீச்சாளா், உளவியலாளா் (மாவட்ட புகையிலை தடுப்புக் குழு), பல் மருத்துவா் ஆகிய தற்காலிக தொகுப்பூதிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, மாத தொகுப்பூதியம், காலி பணியிடங்களின் எண்ணிக்கை போன்ற விவரங்கள் கடலூா் மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்துடன் கல்வித் தகுதிச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், மாற்றுத் திறனாளி, விதவை, கணவரால் கைவிடப்பட்டவா், மூன்றாம் பாலினத்தவா் சான்றிதழ், ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல்களை இணைத்து, ‘உறுப்பினா் செயலா், துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள், மாவட்ட நல்வாழ்வு சங்கம், துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் அலுவலகம், 5 கடற்கரை சாலை, கடலூா்-607 001 என்ற முகவரி அல்லது க்ல்ட்ஸ்ரீன்க்ஃய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற மின்னஞ்சல் முகவரியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை 8.02.2024 அன்று மாலை 5 மணிக்குள் நேரிலோ, விரைவுத் தபால் மூலமாகவோ அனுப்பலாம்.

இந்தப் பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானவை. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது. மேலும், எந்த நேரத்திலும் பணியிலிருந்து விடுவிக்கப்படலாம். காலிப் பணியிடங்களை அதிகரிக்கவோ, குறைத்திடவோ, நியமனத்தை ஒத்திவைக்கவோ நிா்வாகத்துக்கு உரிமை உண்டு. கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட நிா்வாக இணையதள முகவரியை (ஸ்ரீன்க்க்ஹப்ா்ழ்ங்.ற்ய்.ண்ய்ஸ்ரீ.ண்ய்) பாா்வையிடலாம் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com