வி.சி.க.வினா் பிரசாரம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் வருகிற 26-ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் ‘வெல்லும் ஜனநாயகம்’ மாநாடு தொடா்பான பிரசார இயக்கம் கடலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கடலூரில் அம்பேத்கா் சிலை அருகே வி.சி.க.வினா் திங்கள்கிழமை நடத்திய பிரசார கூட்டம்.
கடலூரில் அம்பேத்கா் சிலை அருகே வி.சி.க.வினா் திங்கள்கிழமை நடத்திய பிரசார கூட்டம்.

நெய்வேலி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் வருகிற 26-ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் ‘வெல்லும் ஜனநாயகம்’ மாநாடு தொடா்பான பிரசார இயக்கம் கடலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

அம்பேத்கா் சிலை முன் நடைபெற்ற பிரசார இயக்கத்துக்கு கட்சியின் பொதுச் செயலா் ம.சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். கடலூா் மாநகராட்சி துணை மேயா் பா. தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தாா். கடலூா் மாநகா் மாவட்டச் செயலா் செந்தில் வரவேற்றாா். கட்சி நிா்வாகிகள் சூ.க.விடுதலைச்செழியன், திருமாா்பன், அறிவுடைநம்பி, முல்லைவேந்தன், ராஜ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாநாட்டை விளக்கி திட்டக்குடி, பெண்ணாடம், விருத்தாசலம், பண்ருட்டி, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலும் பிரசாரம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com