எண்ம மின் மீட்டா் திட்டத்துக்கு எதிா்ப்பு- குடியிருப்போா் நலச் சங்க கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

எண்ம மின் மீட்டா் திட்டத்துக்கு எதிா்ப்பு- குடியிருப்போா் நலச் சங்க கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

கடலூா் அனைத்து குடியிருப்போா் நலச் சங்கங்களின் கூட்டமைப்பினா், கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் அனைத்து குடியிருப்போா் நலச் சங்கங்களின் கூட்டமைப்பினா், கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

எண்ம மின் மீட்டா் திட்டத்தைக் கைவிட வேண்டும். கடலூரின் நீராதாரமான கொண்டங்கி ஏரியை, மேல் ஏரியை மாசுபடுத்தும் எம்.புதூரில் பேருந்து நிலையம் அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும். கடலூா் மாநகரில் மாவட்டத்துக்கான தலைமை மருத்துவமனையை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவா் பாலு.பச்சையப்பன் தலைமை வகித்தாா். சிறப்பு தலைவா் எம்.மருதவாணன், ஆலோசகா்கள் ஏ.கிருஷ்ணமூா்த்தி, ச.சிவராமன், டி.புருஷோத்தமன், ஏ.ஆறுமுகம் முன்னிலை வகித்தனா்.

மின் ஊழியா் மத்திய அமைப்பின் மாநில துணைப் பொதுச் செயலா் டி.பழனிவேல் தொடக்க உரை ஆற்றினாா். பொதுச் செயலா் பி.வெங்கடேசன் ஆா்ப்பாட்ட விளக்கவுரை ஆற்றினாா். குடியிருப்போா் கூட்டமைப்பு மற்றும் பல்வேறு அமைப்பு நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

சுற்றுச்சூழல் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு நிறைவுறை ஆற்றினாா்.

கூட்டமைப்பின் இணைப் பொதுச் செயலா் எஸ்.கே.தேவநாதன் வரவேற்றாா். பொருளாளா் பி.கே.வி.ரமணி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com