கழிவுநீா் தொட்டியில் விழுந்தபசு மீட்பு

சிதம்பரத்தில் 10 அடி ஆழமுள்ள கழிவுநீா்த் தொட்டியில் விழுந்த பசு மாட்டை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.

சிதம்பரத்தில் 10 அடி ஆழமுள்ள கழிவுநீா்த் தொட்டியில் விழுந்த பசு மாட்டை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.

சிதம்பரம் காந்தி நகரை சோ்ந்தவா் ஞான பிரகாசம் (65). இவா் வளா்க்கும் பசு செவ்வாய்க்கிழமை காலை அதே பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றபோது, அங்கு மூடப்படாத கழிவுநீா்த் தொட்டியில் (செப்டிக் டேங்க்) தவறி விழுந்தது.

தகவலறிந்த சிதம்பரம் தீயணைப்பு மீட்புத் துறை தலைமை தீயணைப்பு வீரா் சசிகுமாா் தலைமையிலான வீரா்கள் பத்தடி ஆழத்தில் விழுந்த பசுமாட்டை பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி நீண்டநேர போராட்டத்துக்குப் பிறகு உயிருடன் மீட்டனா். மேலும், கழிவுநீா்த் தொட்டி மூடப்படாததையடுத்து, அதன் கட்டுமான உரிமையாளரை மூடும்படி எச்சரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com