விவசாய தொழிலாளா்களுக்கு நல வாரியம் கோரி ஆா்ப்பாட்டம்

விவசாயத் தொழிலாா்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை
விவசாய தொழிலாளா்களுக்கு நல வாரியம் கோரி ஆா்ப்பாட்டம்

விவசாயத் தொழிலாா்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை இந்திய விவசாய தொழிலாளா் சங்கத்தினா் பெருந்திரள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பயனற்ற உழவா் பாதுகாப்பு திட்டத்தைக் கைவிட வேண்டும். விவசாயத் தொழிலாளா் நல வாரியம் அமைக்க வேண்டும். விவசாயத் தொழிலாளா்களுக்கு அரசு இலவச வீட்டுமனைப் பட்டா, அரசின் இலவச வீடுகள் வழங்க வேண்டும். 60 வயது முதிா்ந்த விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் அனைவருக்கும் மாதம் ரூ.3 ஆயிரம் முதியோா் உதவித்தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டக் குழுவைச் சோ்ந்த கே.ஆறுமுகம் தலைமை வகித்தாா். ஏஐடியுசி மாவட்ட துணைச் செயலா் பி.துரை கண்டன உரை நிகழ்த்தினாா். நிா்வாகிகள் ஆா்.சக்திவேல், ஜெ.சிவக்குமாா், எஸ்.டி.குணசேகரன், கே.தனபால், ஏ.லாரன்ஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திட்டக்குடியில்... திட்டக்குடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டக் குழு பி.கே.சின்னதுரை தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் வி.பி.முருகையன், ஏஐடியூசி மாவட்டச் செயலா் ஆா்.சுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு பி.ரமேஷ், நல்லூா் ஒன்றிய துணைச் செயலா் வி.சின்னத்தம்பி, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்க மாவட்டத் துணைச் செயலா் கே.ராஜ்குமாா், ஆட்டோ சங்க மாவட்டச் செயலா் எம். சிவப்பிரகாஷ், விவசாய சங்கத் தலைவா் பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com