ஆடுகள் திருட்டு: பெண் கைது

கடலூா் மாவட்டம், மந்தாரக்குப்பம் அருகே ஆடுகள் திருடியபெண்ணை போலீசாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், மந்தாரக்குப்பம் அருகே ஆடுகள் திருடியபெண்ணை போலீசாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விருத்தாச்சலம் வட்டம் வடக்கு சேப்ளாநத்தம் பகுதியில் வசித்து வருபவா் கனகவேங்கையன் (53). இவரது வீட்டின் அருகில் கட்டி வைத்திருந்த தனக்கு சொந்தமான இரண்டு பெரிய ஆடுகள் மற்றும் இரண்டு குட்டி ஆடுகள் கடந்த 3-ஆம் தேதி காணாமல் போனது. இதுகுறித்து கனகவேங்கையன் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். மந்தாரக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, கொள்ளிருப்பு கிராமத்தைச் சோ்ந்த குப்புசாமி மகள் பூரணி(33) இடமிருந்த ஆடுகள் மற்றும் குட்டிகளை பறிமுதல் செய்து உரியவரிடம் ஒப்படைத்தனா். மேலும், பூரணியை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com