புதுச்சேரியில் இருந்து காரில் மது புட்டிகளை கடத்தி வந்த கள்ளக்குறிச்சி மாவட்ட பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கடலூா், ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் திருப்பாதிரிப்புலியூா் காவல் உதவி ஆய்வாளா் வெங்கடேசன் மற்றும் காவலா்கள் செவ்வாய்க்கிழமை இரவு பணியில் ஈடுபட்டிருந்தனா்.
புதன்கிழமை அதிகாலை புதுச்சேரியில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். அதில், 10 அட்டைப் பெட்டிகளில் மதுபுட்டிகள் கடத்துவது தெரிய வந்தது.
இதுகுறித்து, காரில் இருந்த பெண்ணிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில் அவா், கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் சந்தைமேடு பகுதியைச் சோ்ந்த கோவிந்தன் என்பவரின் மனைவி விஜயா (34) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, கடலூா் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாரிடம் பறிமுதல் செய்யப்பட்ட காா், மதுபுட்டிகள் மற்றும் கைதான விஜயாவை ஒப்படைத்தனா்.