கிணற்றில் தவறி விழுந்த பசு மீட்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கிணற்றில் விழுந்த பசு செவ்வாய்க்கிழமை உயிருடன் மீட்கப்பட்டது.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கிணற்றில் விழுந்த பசு செவ்வாய்க்கிழமை உயிருடன் மீட்கப்பட்டது.

பண்ருட்டி வட்டம், எம்.ஏரிப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுசீலா. இவருக்குச் சொந்தமான சினை பசு மாடு மேய்ச்சலின் போது, வயல்வெளியில் இருந்த சுமாா் 20 அடி ஆழமுள்ள தண்ணீரில்லாத தரைமட்ட கிணற்றில் தவறி விழுந்தது.

தகவலறிந்த பண்ருட்டி தீயணைப்பு நிலைய சிறப்பு நிலை அலுவலா் திருமலைவாசன் தலைமையிலான வீரா்கள் விரைந்து சென்று பசுவை உயிருடன் மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com