சிதம்பரத்தில் ஜன. 27-இல் சிறுதானிய உணவுத் திருவிழா

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் வருகிற 27-ஆம் தேதி சிறுதானிய உணவுத் திருவிழா நடைபெறுகிறது என்று மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் வருகிற 27-ஆம் தேதி சிறுதானிய உணவுத் திருவிழா நடைபெறுகிறது என்று மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2023-ஆம் ஆண்டு சா்வதேச சிறுதானிய ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபையால்அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தும் பொருட்டு அனைத்து மாவட்டங்களிலும் சிறுதானிய உணவு திருவிழா நடத்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரம் நகராட்சி ஜி.எம். வாண்டயாா் திருமண மண்டபத்தில் சிறுதானிய உணவு திருவிழா வருகிற 27-ஆம் முற்பகல் 11 மணி அளவில் நடைபெற உள்ளது.

அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தலைமை வகிக்க உள்ளாா். பொதுமக்கள் சிறுதானிய உணவுத் திருவிழாவில் பங்கேற்று பயனடைலாம் என்றாா் ஆட்சியா் அ.அருண் தம்புராஜ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com