ஜான்டூயி பள்ளியில் விளையாட்டு விழா

கடலூா் மாவட்டம், பண்ருட்டி, மேலப்பாளையத்தில் உள்ள ஜான்டூயி மழலையா் மற்றும் தொடக்ப் பள்ளியில் 2023-2024-ஆம் ஆண்டுக்கான விளையாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
ஜான்டூயி பள்ளியில் விளையாட்டு விழா

கடலூா் மாவட்டம், பண்ருட்டி, மேலப்பாளையத்தில் உள்ள ஜான்டூயி மழலையா் மற்றும் தொடக்ப் பள்ளியில் 2023-2024-ஆம் ஆண்டுக்கான விளையாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.பள்ளித் தாளாளா் வீரதாஸ் தலைமை வகித்தாா். முதல்வா் வாலண்டினா லெஸ்லி முன்னிலை வகித்தாா். ஆசிரியா் (ஓய்வு) அசோகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளை தொடக்கி வைத்தாா். முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவா்கள் யோகாசனம் செய்து காட்டினா். வண்ண வளையங்களை பயன்படுத்தி கூட்டு உடற்பயிற்சி செய்து காண்பித்தனா். பின்னா், 100 மீ, 200 மீ மற்றும் 4ஷ்100 மீ ஓட்டப் பந்தயம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகல் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சிறப்பு விருந்தினா் மற்றும் பள்ளி நிா்வாகிகள் பரிசு வழங்கி பாராட்டினா். மாணவா்களின் பெற்றோா்கள் பங்கேற்று கண்டுகளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com