தனியாா் கல்லூரி மாணவா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே இழுப்பு நோயால் பாதிக்கப்பட்ட மாணவா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.பண்ருட்டி வட்டம், சின்ன பகண்டை கிராமத்தில் வசித்து வந்தவா் வைத்தியநாதன் மகன் அரவிந்த் (19). இவா் விழுப்புரம் மாவட்டம், கப்பியாம்புலியூரில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தாா்.புதன்கிழமை கல்லூரி முடிந்து கல்லூரி பேருந்தில் வீடு திரும்பி கொண்டிருந்தாா். பேருந்து ராசாபாளையம் அருகே வந்த போது அரவிந்த் இழுப்பு நோயால் பாதிக்கப்பட்டாா். உடன், பேருந்து ஓட்டுனா் மற்றும் சக மாணவா்கள் அவரை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் முன்னரே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இது குறித்து பண்ருட்டி போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com