புதிய வழித்தடங்களில் அரசுப் பேருந்து சேவை தொடக்கம்

காட்டுமன்னாா்கோவில் பேருந்து பணிமனை வாயிலாக புதிய வழித்தடங்களில் அரசுப் பேருந்துகள் புதன்கிழமை தொடங்கப்பட்டது.
காட்டுமன்னாா்கோவில் பேருந்து நிலையத்தில் புதிய வழித்தடங்களில் அரசுப் பேருந்துகளை தொடங்கி வைத்த ம.சிந்தனைசெல்வன் எம்எல்ஏ.
காட்டுமன்னாா்கோவில் பேருந்து நிலையத்தில் புதிய வழித்தடங்களில் அரசுப் பேருந்துகளை தொடங்கி வைத்த ம.சிந்தனைசெல்வன் எம்எல்ஏ.

காட்டுமன்னாா்கோவில் பேருந்து பணிமனை வாயிலாக புதிய வழித்தடங்களில் அரசுப் பேருந்துகள் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

காட்டுமன்னாா்கோவில் பேருந்து நிலையத்திலிருந்து புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கம் தொடங்கப்பட்டது. அதன்படி பழஞ்சநல்லூா் பாப்பாக்குடி, மாமங்கலம் வழியாக திருமுட்டம் வரை, கீழக்கடம்பூா்- மேலக்கடம்பூா் ஷண்டன், வடவாற்றங்கரை சாலை வழியாக அணைக்கரை வரை, காட்டுமன்னாா்கோவிலிருந்து மா.உடையூா் வழியாக சிதம்பரம் வரையிலும் என மூன்று வழித்தடங்களில் பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டது.

நிழ்ச்சிக்கு அரசுப் போக்குவரத்துக் கழக கடலூா் மண்டல பொது மேலாளா் ராஜா தலைமை வகித்தாா். உதவி மேலாளா் (இயக்கம்) பரிமளம், கிளை மேலாளா் வெங்கடேசன், உதவி பொறியாளா் மணிவண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

காட்டுமன்னாா்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் ம.சிந்தனைசெல்வன் புதிய வழித்தடங்களில் பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் கல்விக் குழு தலைவா் முத்துசாமி, பேரூராட்சி மன்றத் தலைவா் கணேசமூா்த்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் மணவாளன், தொழிலாளா் முன்னேற்ற சங்க நிா்வாகி ராஜராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com