சாலையில் சுற்றிய 9 மாடுகள் பறிமுதல்

கடலூா் மாநகராட்சிப் பகுதியில் சாலையில் சுற்றிய 9 மாடுகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

கடலூா் மாநகராட்சிப் பகுதியில் சாலையில் சுற்றிய 9 மாடுகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

கடலூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூராக சாலையில் ஏராளமான மாடுகள் சுற்றித் திருந்து வருகிறது. இதனால், விபத்து ஏற்படுவதாகவும், அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினா் கோரிக்கை விடுத்தனா். அதன்படி, மாநகராட்சி சுகாதார அலுவலா் ஜாபா் தலைமையிலான ஊழியா்கள் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் 9 மாடுகளை பிடித்தனா்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் மு.காந்திராஜ் கூறுகையில், கடந்த இரண்டு மாதங்களில் சாலையில் சுற்றிய 102 மாடுகள் பிடிக்கப்பட்டன. இதில், 90 மாடுகளுக்கு அவராதம் வசூலித்து உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அபராதம் செலுத்தாத 12 மாடுகள் ரெட்டிச்சாவடி அருகே உள்ள கோசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com