பேரூராட்சிகள் திட்டப் பணிகள் ஆய்வுக் கூட்டம் அமைச்சா் பங்கேற்பு

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் பல்வேறு பேரூராட்சிகளில் நடைபெறும் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பேரூராட்சிகள் திட்டப் பணிகள் ஆய்வுக் கூட்டம் அமைச்சா் பங்கேற்பு

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் பல்வேறு பேரூராட்சிகளில் நடைபெறும் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாநில வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தலைமை வகித்து குறிஞ்சிப்பாடி, அண்ணாமலை நகா், காட்டுமன்னாா்கோயில், கிள்ளை, புவனகிரி, ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாதோப்பு, லால்பேட்டை, கெங்கைகொண்டான் மற்றும் பரங்கிப்பேட்டை ஆகிய பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தாா்.

2021-22ஆம் ஆண்டில் பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.3,486.39 லட்சம் செலவில் 126 பணிகள் மேற்கொள்ளப்பட்டு 115 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 11 பணிகள் நடைபெற்று வருகின்றன. 2022-23ஆம் ஆண்டில் பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.3,871.34 லட்சம் மதிப்பில் 184 பணிகள் மேற்கொள்ளப்பட்டு 80 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும், 104 பணிகள் நடைபெற்று வருகின்றன.

2023-24ஆம் ஆண்டில் பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.6118.66 லட்சம் மதிப்பீட்டில் 105 பணிகள் மேற்கொள்ளப்பட்டு 11 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மேலும் 94 பணிகள் நடைபெற்று வருகின்றன.

குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் பேருந்து நிலையம் சீரமைக்கும் பணி ரூ.482.80 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு, 90 சதவீதப் பணிகள் முடிக்கப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது. ரூ.142 லட்சத்தில் எரிவாயு தகனமேடை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு 75 சதவீத பணிகள் முடிவுற்றுள்ளது மற்றும் ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சியில் ரூ.167 லட்சத்தில் எரிவாயு தகனமேடை அமைக்க பணி ஆணை வழங்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது.

காட்டுமன்னாா்கோயில் பேரூராட்சியில் ரூ.120 லட்சத்தில் சாலைஅமைக்கும் பணி முடிவுற்றுள்ளது. இப்பேரூராட்சிகளில் பல்வேறு திட்டப்பணிகளின் நிலைக்குறித்து ஆய்வு செய்து, நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அமைச்சா் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் கடலூா் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் வெங்கடேசன், உதவி செயற்பொறியாளா், செயல் அலுவலா்கள், இளநிலை பொறியாளா்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com