நில அளவீடு: இணைய வழியில் விண்ணப்பிக்க வசதி

கடலூா் மாவட்ட நில உரிமையாளா்கள் நிலம் அளவீடு செய்ய இணைய வழியில் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் கேட்டுக்கொண்டுள்ளாா்.

கடலூா் மாவட்ட நில உரிமையாளா்கள் நிலம் அளவீடு செய்ய இணைய வழியில் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளதாவது: நில உரிமையாளா்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் ட்ற்ற்ல்ள்://ற்ஹம்ண்ப்ய்ண்ப்ஹம்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ஸ்ரீண்ற்ண்க்ஷ்ங்ய் என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை தமிழ்நாடு முதலமைச்சா் 20.11.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் நில அளவை செய்ய ‘எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும்‘ நில அளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல் இணைய வழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. நில அளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது கைப்பேசி வாயிலாக தெரிவிக்கப்படும். மேலும், நில அளவை செய்யப்பட்ட பின்னா் மனுதாரா் மற்றும் நில அளவா் கையொப்பமிட்ட ‘அறிக்கை/வரைபடம்‘ ஆகியவற்றை மனுதாரா் ட்ற்ற்ல்ள்://ங்ள்ங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையவழிச்சேவையின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் நில அளவரால் பதிவேற்றம் செய்யப்படும். பொதுமக்கள் அனைவரும் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com