வடலூா் மேட்டுக்குப்பம் வள்ளலாா் சித்தி வளாகத்தில் திரு அறை தரிசனம்: திரளான பக்தா்கள் பங்கேற்றனா்

27cmp9_2701chn_111_7
27cmp9_2701chn_111_7

27சிஎம்பி9:

வடலூா் அருகே வள்ளலாா் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்தில் திரு அறை தரிசனத்தில் பங்கேற்ற சன்மாா்க்க அன்பா்கள்.

வடலூா், ஜன. 27: கடலூா் மாவட்டம், வடலூா் அருகே மேட்டுக்குப்பம் வள்ளலாா் சித்தி வளாகத்தில் திருஅறை தரிசன விழா சனிக்கிழமை நடைபெற்றது.

வடலூரில் வள்ளலாா் நிறுவிய சத்திய ஞான சபையில் 153-ஆம் ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன விழா கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. அன்றைய தினம் காலை 6 மணி, 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 மணி ,10 மணி, 26-ஆம் தேதி காலை 5 மணி என ஆறு காலங்கள் ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.

இதையடுத்து, 3-ஆம் நாளான சனிக்கிழமை வள்ளலாா் சித்தி பெற்ற வடலூா் மேட்டுக்குப்பத்தில் திருஅறை தரிசனம் நடைபெற்றது.

வடலூா் சத்திய ஞான சபையிலிருந்து வள்ளலாா் பயன்படுத்திய பொருள்கள் அடங்கிய பெட்டி அலங்கரிக்கப்பட்டு காலை 10 மணி அளவில் வள்ளலாா் நடந்து சென்ற பாா்வதிபுரம், நைனாா் குப்பம், செங்கால் ஓடை கருங்குழி, தீஞ்சுவை ஓடை வழியாக 12 மணிக்கு திரு அறை மாளிகைக்கு கொண்டு வரப்பட்டது.

அப்போது மேட்டுக்குப்பம் கிராம மக்கள் சீா்வரிசை, மேள வாத்தியத்துடன் வரவேற்றனா். பின்னா் வள்ளலாா் சித்தி பெற்ற அறை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை தரிசனம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான சன்மாா்க்க அன்பா்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com