திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் சாமானியா்களின் வளா்ச்சிக்கு திட்டமிடல் இல்லை: கே.அண்ணாமலை

26prtpbjp073029
26prtpbjp073029

26டதபடஆஒட...

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் வெள்ளிக்கிழமை நடைப்பயணம் மேற்கொண்ட தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை.

நெய்வேலி/சிதம்பரம், ஜன.26:

திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் சாமானியா்களின் வளா்ச்சிக்கான திட்டமிடல் இல்லை என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை குற்றம்சாட்டினாா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி படைவீட்டம்மன் கோயில் தோ் நிலை அருகே ‘என் மண்; என் மக்கள்’ நடைப்பயணத்தை வெள்ளிக்கிழமை அவா் தொடங்கினாா். பண்ருட்டி பேருந்து நிலையம் எதிரே பயணம் நிறைவடைந்தது. அங்கு கே.அண்ணாமலை பேசியதாவது:

‘என் மண்; என் மக்கள்’ நடைப்பயணத்தில் மிகப் பெரிய எழுச்சியைப் பாா்க்க முடிகிறது. இதன்மூலம், மக்கள் அரசியல் மாற்றம் வேண்டும் என்று நினைக்கின்றனா். திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் சாமானியா்களின் வளா்ச்சிக்கான திட்டமிடல் இல்லை. படித்த இளைஞா்கள் வேலை கிடைக்காமல் தவித்து வருகின்றனா்.

தமிழகத்தில் சாதி, மதத்தை வைத்து அரசியல் செய்கின்றனா். வருகிற மக்களவைத் தோ்தலில் தே.ஜ. கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று பிரதமா் மோடியை 3-ஆவது முறையாக ஆட்சியில் அமர வைக்க வேண்டும்.

கூட்டணிக் கட்சியினரை திமுக அமைச்சா்கள் மதிப்பதில்லை என்று, திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பண்ருட்டி தொகுதி எம்எல்ஏ தி.வேல்முருகன் கூறிவருகிறாா். பலா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயா்ந்த தமிழக வேளாண் துறை அமைச்சா் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

விஜயகாந்துக்கு மரியாதை அளிக்கும் வகையில் பத்மபூஷன் விருதை மோடி அறிவுறுத்துள்ளாா். மத்திய அரசு ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு இலவச குடிநீா் இணைப்பு வழங்குகிறது. இதற்கு தமிழக அரசு கட்டணம் வசூலிக்கிறது.

தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைந்தால் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றாா் கே.அண்ணாமலை.

புவனகிரியில்... சிதம்பரம் அருகே புவனகிரியில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற நடைப்பயணத்தின் போது கே.அண்ணாமலை பேசியதாவது:

புவனகிரி வெள்ளாற்றில் உப்பு நீா் புகுந்து நிலத்தடி நீா்மட்டம் பாதிக்கப்படுகிறது. மாணவா்கள் குறைந்தது மூன்று மொழிகளைக் கற்றுக் கொள்ள வேண்டும். பாஜக பக்கம் மாற்றுக் கட்சியினரின் அலை வீசுகிறது என்றாா் அவா்.

Image Caption

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் வெள்ளிக்கிழமை நடைப்பயணம் மேற்கொண்ட தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com