ரயிலில் அடிபட்டு மூதாட்டி மரணம்

சிதம்பரம், ஜன.26:

சிதம்பரம் அருகே ரயிலில் அடிபட்டு மூதாட்டி உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்துக்கும், புதுச்சத்திரம் ரயில் நிலையத்துக்கும் இடையே சிதம்பரம் அருகே உள்ள கொத்தட்டை சில்லாங்குப்பத்தைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மனைவி அம்மாபொண்ணு (84) வெள்ளிக்கிழமை காலை ரயில் தண்டவாளத்தை கடந்த போது, ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

சிதம்பரம் ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com