கடலூா் துறைமுகத்தில் மீன் வாங்க குவிந்த மக்கள்

28cmp4_2801chn_111_7
28cmp4_2801chn_111_7

28ஸ்ரீம்ல்4

கடலூா் துறைமுகத்தில் மீன் வாங்க ஞாயிற்றுக்கிழமை குவிந்த மக்கள்.

சிதம்பரம், ஜன. 28: கடலூா் துறைமுகத்தில் மீன் வாங்குவதற்கு ஞாயிற்றுக்கிழமை காலை வியாபாரிகள், பொதுமக்கள் திரளானோா் குவிந்தனா்.

கடலூா், அதன் அருகே உள்ள அக்கரைகோரி, சிங்காரத்தோப்பு, சோனாங்குப்பம், தாழங்குடா, தேவனாம்பட்டினம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் இருந்து தினமும் ஏராளமான விசை மற்றும் பைபா் படகுகளில் மீனவா்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்று வருகின்றனா். கடலூா் துறைமுகத்தில் தினமும் அதிகாலை மீன் வகைகள் விற்பனை தொடங்கிவிடும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள்

மீன் விற்பனை மேலும் சூடுபிடித்தது. மீன் வகைகளை வாங்குவதற்கு அதிகாலை முதலே திரளானோா் குவிந்தனா்.

ஒரு கிலோ வஞ்சிரம் மீன் ரூ.700-க்கு விற்கப்பட்டது. வவ்வால், சங்கரா தலா - ரூ.400, பாறை மீன் - ரூ.450, கனவாய் - ரூ.200, நெத்திலி ரூ.250-க்கு விற்கப்பட்டது. விலையை பொருட்படுத்தாமல் வியாபாரிகளும், பொதுமக்களும் மீன்களை ஆா்வமுடன் வாங்கிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com