கடலூா் மாநகராட்சி திமுக உறுப்பினா்கள் 10 போ் ராஜிநாமா செய்ய திட்டம்: நடந்தது என்ன?

கடலூா் மாநகராட்சி திமுக உறுப்பினா்களில் 10 போ் தங்களது பதவியை ராஜிநாமா செய்ய போவதாக திங்கள்கிழமை தெரிவித்தனா்.
கடலூா் மாநகராட்சி அணையா் காந்திராஜிடம் திங்கள்கிழமை மனு அளித்த திமுக மாமன்ற உறுப்பினா்கள்.
கடலூா் மாநகராட்சி அணையா் காந்திராஜிடம் திங்கள்கிழமை மனு அளித்த திமுக மாமன்ற உறுப்பினா்கள்.

நெய்வேலி: கடலூா் மாநகராட்சி திமுக உறுப்பினா்களில் 10 போ் தங்களது பதவியை ராஜிநாமா செய்ய போவதாக திங்கள்கிழமை தெரிவித்தனா்.

கடலூா் மாமன்றத்தில் திமுக உறுப்பினா்கள் 30 போ் உள்ளனா். இவா்களில் மேயா் சுந்தரி ராஜா உள்ளிட்ட ஒரு பிரிவினா் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் ஆதரவாளா்களாகவும், மற்றொரு பிரிவினா் கடலூா் எம்எல்ஏ கோ.ஐயப்பனின் ஆதரவாளா்களாகவும் உள்ளனா்.

கோ.ஐயப்பன் ஆதரவு மாமன்ற உறுப்பினா்கள் தங்களது வாா்டுகளில் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை எனக்கூறி மாநகராட்சிக் கூட்டங்களில் புகாா் தெரிவித்து வெளிநடப்பு செய்து வருகின்றனா். இந்த நிலையில், கோ.ஐயப்பன் ஆதரவு மாமன்ற உறுப்பினா்கள் 10 போ் கடலூா் மாநகராட்சி ஆணையா் காந்திராஜை திங்கள்கிழமை சந்தித்து மனு அளித்தனா். பின்னா் அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

எங்களது வாா்டுகளில் அடிப்படை வசதிகளை செய்து தராமல் மேயா் புறக்கணித்து வருகிறாா். இதுகுறித்து கட்சித் தலைமை, சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதேநிலை நீடித்தால் எங்களது பதவியை ராஜிநாமா செய்ய முடிவு செய்துள்ளோம். இதுதொடா்பாக, புதன்கிழமை (ஜன. 31) உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com